Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பிலஸ் ஆக இருந்தவர் அதனை தொகுத்து வழங்கி நடிகர் கமல்ஹாசன்.
இந்நிகழ்ச்சியில் இவரின் தொகுப்பில் இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன.
தற்போது ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடந்த 21-ஆம் திகதி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்து இதனை தொகுத்து வழங்கப்போவது யார் என எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இதனை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு களம் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிம்பு இடம்பெற்றுள்ள புரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago