2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரபல தெலுங்கு நடிகர் காலமானார்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி(74) மாரடைப்பால் காலமானார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. பிரம்மபுத்ரூடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சமரசீமா ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். 

தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்ர நடிகராகவும் வலம் வந்த இவர், தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஆந்திராவில் தனது இல்லத்தில் வசித்து வந்த இவர் இன்று(செப்.,8) அதிகாலை மாரடைப்பால் காலமானார். 

இவரின் மறைவு தெலுங்கு சினிமாவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரது சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X