Editorial / 2025 மே 29 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார்.
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.
45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago