Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பொலிவுட் மற்றும் ஹொலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான்.
பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
54 வயதான இர்ஃபான் கான் 2018 ஆம் ஆண்டில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்திருந்தார்.
இர்ஃபான் கானின் மறைவு செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .