Ilango Bharathy / 2023 மே 16 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.
பாரதி கண்ணம்மா மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

முன்னதாக, இவர் சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். சில நாள்களுக்கு முன்பு பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாகவும் கூறப்பட்டது. நேற்று முன் தினம் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். விஜயலட்சுமியின் மறைவுக்கு திரைவுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .