Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒருவருடன் இணைந்து நடிக்க முடியாது என விஜய்சேதுபதி கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த படக்குழுவினர் முயற்சி செய்தனர்.
ஆனால் அப் படத்திற்கு கீர்த்தி ஷெட்டி நாயகியாக வேண்டாம் என்றும் வேறு நடிகையை பரிசீலனை செய்யவும் என்றும் விஜய் சேதுபதி படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம்.
ஏனெனில் விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான ’உப்பன்னா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு மகளாக நடித்த நடிகைகளுடன் பின்னாளில் ஜோடியாக நடித்த வரலாறு கோலிவுட்டில் இருந்தாலும், மிக குறுகிய காலத்தில் மகளாக நடித்தவருடன் ஜோடியாக நடிக்க விஜய்சேதுபதி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago