Editorial / 2024 மே 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
1977 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ கிருஷ்ணா லீலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இசை உலகில் அறிமுகமான உமா ரமணன், 1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற “பூங்கதவே தாழ் திறவாய்” என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தார். இவர் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள உமா ரமணன், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், ஒரு கைதியின் டைரி, திருப்பாச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. S
49 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
9 hours ago