Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற அவர் தனது திருமணப் பரிசாக 5 லீற்றர் பெட்ரோலை வழங்கியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியில், இரண்டு கேன்களில் பெட்ரோலை பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மயில்சாமி போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 minute ago
21 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
23 minute ago
37 minute ago