2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புழைய ஜோடியை இணைக்க புதிய முயற்சி

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை தாண்டி வருவாயா’என்ற சூப்பர்ஹிட் திரைப்படம் உருவாகியது.

அதன் பின் 2016ஆம் ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் மற்றுமொரு திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கௌதம் மேனன் இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கௌதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’இது நம்ம ஆளு’ஆகிய இரண்டு திரைப்படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X