2026 மார்ச் 05, வியாழக்கிழமை

‘புஷ்பா 2’ டிசம்பரில் வெளியாகும்

Editorial   / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் முன்கூட்டியே தெரிவித்தபடி டிசம்பர் 6-ம் திகதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் ஆகஸ்ட் 15-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பருக்கு ரிலீஸ் திகதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் - இயக்குநர் சுகுமாருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பில் சுணக்கம் நிலவி வருவதாக தகவல் வெளியானது.

இதனால் படம் டிசம்பர் மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், இது படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் படம் டிசம்பர் 6-ம் திகதி சொன்னபடி வெளியாகும் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .