2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’புஷ்பா2’ நெரிசலில் உயிரிழந்த பெண்: படக்குழு வருத்தம்

Editorial   / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘புஷ்பா2’ படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்ததற்காக படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‘புஷ்பா2 - தி ரூல்’ திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு குடும்பத்துடன் நேற்று இரவு சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகனும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து ‘புஷ்பா2’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘புஷ்பா2’ படத்திற்காக   திரையரங்கிற்கு வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது செய்தி எங்கள் இதயத்தை நொறுங்க செய்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அந்த சிறுவனுக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் அவர்களுடன் எல்லா வழிகளிலும் துணை நிற்போம்’ எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X