Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (வயது 37). இவர் இந்தியில் சிஸ்கியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உட்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார்.
நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார் .
அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர் மலபிகா தாஸ் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குறித்த அடுக்குமாடியின் குடியிருப்பாளர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் .
அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு நடிகை மலபிகா தாஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இந்தி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago