2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை ?

Mithuna   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பூனம் பாண்டே  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் மர்ம மரணம் என மேலாளர் அறிவித்தார். அவருடைய தோழி பூனம் உயிருடன் இருந்ததாக பதிவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

இந்த தகவல்களுக்கு முடிவு கட்டும் வகையில்   திடீரென பூனம் பாண்டே தனது இன்ஸ்டா  பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அத்துடன்  இந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.  நோய்க்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பொய் சொல்வது மட்டமான செயல் . சுய விளம்பரத்திற்காக செய்யும் பைத்தியக்காரத்தனம் எனவும்  நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.  

 2000ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சட்டப்படி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் 3  ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் .   அதே தவறை திரும்ப செய்தால்  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும்  கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் சமூக வலைதளத்தில்   தகவல் பரப்பிய பூனம் பாண்டே மீது சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தால் அவருக்கு அதிகபட்சமாக  5  ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X