2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“பெண்களுக்கு பெரிய விஷயம்”

Editorial   / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார்.

இப்படம் கடந்த வருடம் டிசெம்பர் 1-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

நயன்தாரா தான் ஹீரோவாக நடித்த படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர். இந்நிலையில் நயன்தாரா, பெண்கள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

பெண்கள், சமூகத்தில் இருக்கும் பல்வேறு சூழ்நிலைகளை உடைத்து வெளியே வருவது மிகப் பெரிய விஷயமாகும். அதை அவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதை தாண்டி, இந்த சமுகத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் பெண்களுக்காகவும் சேர்த்து செய்து இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X