Editorial / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் போதைப்பொருள் பயன்படுத்தியது அவரது தலைமுடி மாதிரிகளை ஆய்வு செய்ததில் உறுதியாகியுள்ளது.
திரைப்பட உலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக பாலிவுட் பிரபலங்களை நோக்கியே இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டு கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
விருந்து ஒன்றில் அரங்கேறிய இந்த கைது நடவடிக்கையில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகைகள் இருவரும் 4 மாதங்களுக்கு பின்னர் விடுதலையாகி வெளியில் வந்தனர்.
போதைபொருட்களை பயன்படுத்தினார்களா என்பதை அறிவதற்காக ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் தலைமுடி, ரத்த மாதிரி ஆகியவற்றை ஆய்வுக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
அவர்களின் தலைமுடி மாதிரி ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பரிசோதனை செய்ததில் நடிகைகள் இருவரும் போதைப் பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட், “இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,மேற்கொண்டு எதுவும் கூறமுடியாது” என்றார்.
தலைமுடி மாதிரி சோதனை சென்றால் என்ன?
பொதுவாக 2020ஆம் ஆண்டுக்கு முன்புவரை போதைப் பொருள் பயன்படுத்தியதை கண்டறிய சிறுநீர், ரத்த மாதிரிகளை பெற்று அவற்றை ஆய்வாக பொலிஸார் அனுப்புவார்கள், எனினும், இந்த பரிசோதனைகள் முடிவில் தெளிவாக கிடைப்பதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றவாளியை பொலிஸார் பிடித்திருந்தால் அவர்களின் சிறுநீர், ரத்த மாதிரியை பரிசோதித்தால் முடிவுகள் நெகட்டிவ்வாகவே வரும்.
ஆனால், தலைமுடி மாதிரி சோதனை மூலம் முடிவுகளை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இந்த சோதனைக்காக தலையின் வெவ்வேறு இடங்களில் இருந்து 100 முதல் 120 முடிகள் சேகரிக்கப்படும். தலையில் முடி இல்லாதவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள முடிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் .
ஒரு நபர் போதைப் பொருட்களை பயன்படுத்தியிருந்தால் அவரது தலைமுடி மாதிரிகளை ஆய்வு செய்வது மூலம் கடந்த 90 நாட்களில் அவர் போதைப் பொருளை பயன்படுத்தினாரா இல்லையா என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
13 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago