2025 மே 12, திங்கட்கிழமை

மார்ச் இறுதியில் 'AK57' தனிப்பாடல்

George   / 2017 ஜனவரி 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வேதாளம்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவாவும், அஜீத்தும் மீண்டும் இணைந்துள்ள 'AK57' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மிச்சமிருக்கும்நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் பண்ணும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர்.

வருகிற பொங்கல் நாளில் திரைப்படத்தின் தலைப்பு வெளியாக உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் வெளியிட உள்ள இத்திரைப்படத்தின் டீசரை குடியரசு தினத்தை முன்னிட்டு இம்மாதம் 26-ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக மார்ச் கடைசிவாரத்தில் வெளியிட உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே மற்ற பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அஜித் படத்தின் இசைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் அனிருத் ஈடுபட்டிருக்கிறார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X