R.Tharaniya / 2025 மார்ச் 16 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் கான் தனது நீண்ட நாள் கணவான மகாபாரதத்தை படமாக எடுக்க உள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம் அமீர்கான் 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இதற்கிடையில், அமீர்கான் தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்று அடிக்கடி பேசியுள்ளார். அவ்வப்போது, அந்தப் படம் குறித்த வதந்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கான், மகாபாரதத்தின் பதிப்பைத் தயாரிப்பது பற்றி பேசியுள்ளார். அதாவது "மகாபாரதம்' படத்தை உருவாக்குவது எனது கனவு, நானும் எனது குழுவும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். தற்போது எழுத்துப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.
46 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago