R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘தக்லைஃப்’ திரைப்படத்தில் குஷ்புவின் மகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில், தற்போது இன்னொரு பிரபல நடிகரின் மகளும் இதே படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ‘தக்லைஃப்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் தனது மகள் சில மாதங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, தற்போது நடிகர் ரகுமானின் மகள் அலிஷாவும், இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தக்லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக மட்டுமின்றி நாசர் மகள் என்ற சிறிய கேரக்டரிலும் அலிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



29 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago