J.A. George / 2021 ஜூன் 01 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்த இந்த் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குநர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.
இந்நிலையில், அதர்வா திரைப்படத்துக்கு பின் மரகத நாணயம் திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார்.
மரகத நாணயம் 2 திரைப்படத்துக்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும், அதற்கான கதையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் 'மரகத நாணயம் 2' விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago