2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மற்றுமொரு டிவி நடிகையும் மரணம்

George   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை அபர்ணா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை.

ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

பிரபல மலையாள நடிகை ரேகா மோகன்,  கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள ரேகா மோகனின் கணவர், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால், தொலைபேசி அழைப்புக்கு எந்தவித பதிலும் இல்லாததால் அவருடைய புகாரை அடுத்து பொலிஸார் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மரணம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.

மரணம் அடைந்த ரேகா மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

45 வயதான ரேகா மோகன், மலையாள சூப்பர் ஸ்டார்களான  மம்முட்டி மற்றும் மோகன்லால் உள்பட பிரபல நடிகர்கள் பலருடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X