2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘மழை பிடிக்காத மனிதன்’

J.A. George   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் என்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 'அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை” போன்ற திரைப்படங்கள் விஜய் என்டனி கைவசம் உள்ளன.

இதுதவிர, கோலிசோடா இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனியும், சரத்குமாரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

ஏற்கெனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகிற டிசெம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X