Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
இடி தாக்கியதில் விவசாயியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு –வந்தாறுமூலை பெருவெளிவட்டை வயற்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய கதிர்காமநாதன் ரமேஸ்குமார் என்பவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
பெருவெளிவட்டை பிரதேசத்திலுள்ள தனது வயலில் வரம்பு கட்டும் வேலையை முடித்துவிட்டு; தனது குடும்ப உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது மின்னல் தாக்கியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
மரணித்தவரின் கையில் மண்வெட்டி இருந்துள்ளது. அவரது உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது வயலிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் திடீர்மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025