2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மியாவுக்கு டும் டும் டும்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை மியா ஜோர்ஜ். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அவர் அமர காவியம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம், யமன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் விக்ரமுடன் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் பிலிப் என்கிற தொழிலபதிருடன் மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம். 

கொரோனா பிரச்சினையால் சில காலம் தள்ளிப்போன திருமணம் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்ச்சி இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X