Editorial / 2020 ஜனவரி 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67).
இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஒஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
இவற்றில் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் பொலிஸாரால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். இவருக்கு எதிராக குற்றம் சுமத்திய பெண்களில் ஒருவர் 2013ஆம் ஆண்டு ஹார்வி தன்னை பலாத்காரம் செய்தார் எனவும், மற்றொரு பெண் 2006ஆம் ஆண்டு தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறி இருந்தனர்.
இந்த 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது.
இதற்கிடையே 1990 காலகட்டத்தில் ஹார்வி தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக 59 வயதான நடிகை அனபெல்லா சியோரா புகார் கூறி இருந்தார்.
அனபெல்லா சியோரா, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டும் “மீடூ” இயக்கத்துக்கு உதவியவர்.
ஹார்வி மீதான வழக்கு விசாரணையின் போது அனபெல்லா சியோரா சாட்சியம் அளித்தார். அப்போது 1990ஆவது காலகட்டத்தில் மனிஹெட்டன் நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தன்னை ஹார்வி கீழே தள்ளி வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறினார். அவரிடம் ஹார்வியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.
10 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
20 minute ago