2025 மே 05, திங்கட்கிழமை

மீண்டும மைக் மோகன்

J.A. George   / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977ஆம் ஆண்டு கமல் நடித்துள்ள “கோகிலா”என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

பின்னர் கதாநாயகனாக நடித்து வந்த இவரது திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பட் ஹிட்டாக அமைந்திருந்தன. பெரும்பாலான திரைப்படங்களில் மைக் பிடித்து பாடும் கதாப்பாத்திரமாக அவருக்கு அமைந்தது.

இதனால் இவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். 1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர்  ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய திரைப்படத்தில் மோகன் நாயகனாக நடிக்க உள்ளார். சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X