2025 மே 07, புதன்கிழமை

மீண்டும் இரட்டை வேடங்களில் மிரட்ட வருகிறார் கார்த்தி

J.A. George   / 2021 மார்ச் 11 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி 22 படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். 

சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி அப்பாவாக 2 வேடங்களில் நடித்து மக்களின் மாதத்தில் இடம் பிடித்தார்.

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். குடும்பமே திரைப்பட பின்னணியில் இருந்தாலும் தன்னுடைய தனி திறமையால் தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் .

தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இயக்கவுள்ளார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகவும், படம் மிகவும் த்ரில்லராக இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X