2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மீண்டும் இரண்டு படங்களில் ரஜினி?

J.A. George   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்ட நிலையில் மீதி உள்ள படத்தையும்  முடிக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

ஓரிரு மாதங்களில் முழு படத்தையும் முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை முடித்த பிறகு ரஜினி மேலும் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க ஆலோசிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஜினியை வைத்து "பேட்ட"என்ற  திரைப்படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல்  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டியதுடன் தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது .

இதுபோல் மேலும் சில இயக்குனர்களும் ரஜினிக்கு கதை வைத்துள்ளனர். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்ததும் ரஜினி நடிக்க உள்ள புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X