Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், புதுமுக நடிகர்-நடிகையருடன் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, சந்தோஷ் பி.ஜெயக்குமார் தயாராகி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் இரண்டாவது பாகத்திலும் இருக்கும். அற்புதமான கதைக்களத்துடன் படத்தை உருவாக்கப் போகிறேன்.
ஏற்கெனவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர்கள் யாரையும், இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தப் போவதில்லை. எல்லோரையும் புதுமுகமாகப் போட்டு படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறேன்.
தேவையானால், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம். எனினும், வழக்கமான பொதுபோக்கு படங்களில் ஒன்றாகவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கும்” என்றார்.


8 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago