2025 மே 05, திங்கட்கிழமை

மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

J.A. George   / 2021 ஜூலை 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழில் அதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் வருகை தந்தனர்.
 
பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்ய சென்றிருந்த ரஜினிகாந்த் நாடு திரும்பியதும் சௌந்தர்யா இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X