2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மீண்டும் பழைய கூட்டணி

J.A. George   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் தற்போது விஜய்யின் 66ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு லோகேஷ், விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் விஜய் உடன் தளபதி67 திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X