J.A. George / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடம் பொங்கல் தினத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்’மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்தன.
தற்போது, தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படத்தை வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும் ஏப்ரல் 14ஆம் திகதி ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே ‘பீஸ்ட்’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு திரைப்படங்களின் வெளியீட்டு திகதியும் ஏப்ரல் 14 என்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மோத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026