2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

Freelancer   / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.

ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.டில்லி பாபு. 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர், ‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார்.

இவருடைய மறைவு, திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட தொடர்ச்சியாக டில்லி பாபு படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X