2025 மே 21, புதன்கிழமை

ரம்யா நம்பீசனின் புது முயற்சி

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிங்கியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

பீட்சா, சேதுபதி திரைப்படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் ரம்யா நம்பீசன். அப்படி நடித்த இரண்டு திரைப்படங்களுமே ஹிட்டாயின.

அதிலும் சேதுபதி திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து ஏகப்பட்ட ரொமான்ஸ் செய்திருந்தார் ரம்யா.

மற்றபடி டமால் டுமீல், நாலு பொலிஸும் நல்லா இருந்த ஊரும் போன்ற திரைப்படங்கள் அவருக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அதேசமயம் தனது தாய்மொழியான மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வரும் ரம்யா நம்பீசன் தற்போது, புலிமுருகன், ஆளத்தூரிலே எதிரி வேட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்

தொடர்ந்து தமிழில் நடிக்க, விஜயசேதுபதி போன்ற தனது அபிமான ஹீரோக்களிடம் அவ்வப்போது அலைபேசி மூலம் நட்பை வளர்த்து வரும் ரம்யா நம்பீசன், அப்போது அவர்கள் மூலம் சில இயக்குநர்களின் நட்பு கிடைக்க, அவர்களிடம் வாய்ப்புக் கேட்டு வருகிறார்.

அப்படி அண்மையில் ரம்யா திரைப்படவேட்டை நடத்திய ஒரு இயக்குநர், 'ரொம்ப எடை போட்டு விட்டீர்கள். குறைந்தபட்சம் 10 கிலோகிராமாவது குறைக்க வேண்டும். அப்போதுதான், உங்களை கதாநாயகி கோணத்தில் யோசிக்கவே முடியும்'என்று கூறி விட்டாராம்.

அதனால், தற்போது டயட்ஸ் கடைபிடித்து வரும் ரம்யா நம்பீசன், தனது விருப்ப உணவுகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, எடைகுறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .