2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ராஜ்கிரணின் மகனை பாத்துருக்கீங்களா..?

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகன் விரைவில் சினிமா இயக்குனராக வர இருப்பதாக ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண். பட தயாரிப்பாளரான இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவானார். 

படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர் ராஜ்கிரண்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெறும் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இன்றுவரை தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில் தனது மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்... என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.

அவர் பெரிய வெற்றிப்பட இயக்குனராக வளர உங்கள் அனைவரும் பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இதுவரை பெரிதாக வெளிவராத நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுஅவர்களின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X