Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம்.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவீதம் வரை முடிந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முக்கியமான காட்சிகளைப் படமாக்க நீண்ட ஷெட்டியூல் ஒன்றை திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன.
ஆனால், அனைத்துமே கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக கொரோனா பாதிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
சிறுசிறு காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago