Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மரியனேசன்.
ஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால் சிறப்பாக ஆட்டத்தை விளையாடினாலும் கவினுடன் ஏற்ப்பட்ட காதலால் சில சிக்கல்களை சந்தித்தார்.
இருப்பினும் இவர்களது காதல் திருமணத்தில் தான் முடியும் என எதிர்பார்த்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த பிறகு இவர்களின் உறவு நீடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அதன் பிறகு திரைப்படங்கள், விளம்பரப்படங்களில் லொஸ்லியா பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை பெற்றோர் திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருமணம் 2021ல் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் லொஸ்லியாவின் நிலைப்பாடு என்ன என்பதை இனிமேல்தான் தெரிய வரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago