2025 மே 17, சனிக்கிழமை

வேதாளம் டிரெய்லருக்கு நடந்தது என்ன?

George   / 2015 நவம்பர் 09 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வேதாளம் திரைப்படத்தின் டிரெய்லர் வராமல் போனது அவர்களை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ஒரு டிரைலரைக் கூட வெளியிட தைரியமில்லையா என்றெல்லாம் கிண்டல் செய்வதற்கு அவர்களால் பதிலடி கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு இயக்குநர் சிவா தான் பொறுப்பேற்றாக வேண்டும். 

ஆனால், அவரோ கடைசி நேரம் வரை திரைப்படத்தின் பணிகளே அதிகமிருந்ததால் டிரெலரை உருவாக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அஜீத்தின் திரைப்படம் சுமாராக இருந்தால் கூட நன்றாக ஓடுவதற்கு அவருடைய ரசிகர்கள்தான் மிகப் பெரும் காரணம். அஜீத் நடிக்கும் எந்தத் திரைப்படத்தையும் வெற்றிகரமாக ஓட வைத்துவிடுவார்கள். 

வேதாளம் திரைப்படத்தின் டீசரையே இந்திய அளவில் சாதனை புரிய வைத்தவர்கள் ஒரு டிரெய்லர் வந்திருந்தால் அதை டீசரை விடவும் இன்னும் பெரிய சாதனை புரிய வைத்திருப்பார்கள். ஆனால், ரசிகர்களின் மனநிலை புரியாமல் வேதாளம் திரைப்படத்துக்கு டிரெய்லரை வெளியிடாமல் ரசிகர்களை இயக்குநர் சிவா ஏமாற்றிவிட்டார்.

உதவி இயக்குநர்களிடமோ, அல்லது திரைப்படத்தின் படத் தொகுப்பாளரிடமோ கொடுத்திருந்தால் கூட அவர்கள் டிரெய்லரை முடித்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால், சிவா டிரெய்லரை செய்யாமல் விட்டதுக்கு ஏதோ ஒரு பின்னணிக் காரணம் இருக்கிறது என்றே கோலிவூட்டில் தெரிவிக்கிறார்கள். அது இயக்குநருக்கும், அஜீத்துக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம் என்றும் கிசுகிசுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .