Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா இன்று வியாழக்கிழமை மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரசன்னா, கடந்த 40 நாட்களாகவே மூளைக் காய்ச்சலுக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். மறைந்த பிரசன்னாவுக்கு வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், விவேக்கின் அப்பா காலமானதுடன் அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .