2025 மே 17, சனிக்கிழமை

விஷால் காயம்: ரஜினி-கமல் மோதல்; சூடுபிடிக்கும் திரையுலகம்

George   / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகியதுடன் விறுவிறுப்பாக பல்சே சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்று முடிந்;தது, விஷால் மீதான தாக்குதல் மற்றும் ரஜினி, கமல் ஆகியோர் நடிகர் சங்கத்தைப்பற்றி தெரிவித்த கருத்துகளால் தென்னிந்திய திரை உலகம் மிகவும் சூடு பிடித்த நிலையில் உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தமிழ்மிரர் கொண்டு வரும் ஒரு பார்வை...

பெயரை மாத்துங்கப்பா...

'நம்ம நடிகர்கள் எல்லாம் அனைவருமே ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி. நமக்குள்ள எப்போதுமே ஒற்றுமை இருக்கும், இருக்க வேண்டும். அண்மைகாலத்தில் சில வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. அதற்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லை என யாரும் நினைக்க கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது, அதில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். எனக்கு இரண்டு வேண்டுகோள் இருக்கின்றன.

முதல் வேண்டுகோள் : யார் வெற்றிப்பெற்று வந்தாலும் சரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்துவிட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை வைக்க வேண்டும்

இரண்டாவது வேண்டுகோள்: ஆயிரம் முறை யோசித்து வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற முடியாமல் போனால் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும்.நல்ல எடுத்துக்காட்டாகவும் இருப்பீர்கள்' என்று ரஜினி கூறினார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது இவ்hறு கூறியுள்ளார்.

'தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் பரம்பரியமானது. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுப்படுத்தக் கூடாது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும், நடிகர்களுக்கென்று ஒரு கட்டடம் இருக்க வேண்டும். 

தென்னிந்திய நடிகர் சங்கம் என் மூத்த கலைஞர்களால் கட்டப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் கட்டிடம் வரும். தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது' என்று கமல் ஹாசன் கூறினார்.

ரஜினி, கமலின் கருத்துக்குறித்து தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ராதாரவி 

'தென்னிந்திய நடிகர் சங்கம் பெயர் மாற்றம் என்பது 4 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பெயர் மாற்றம் குறித்து பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும். பெயர் மாற்றத்துக்கு சட்ட சிக்கல் இருக்கிறது'

நடிகர் கார்த்தி 

'தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பெயர் மாற்றுவதைக் காட்டிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். பெயர் மாற்றம் குறித்து பின்னர் முடிவெடிப்போம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. இளைஞர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறோம். ஆகையால் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று வந்தால் தான் நினைத்ததை சாதிக்க முடியும்'.

நடிகர் சரத்குமார் 

'முதலில் கட்டிடம் கட்டுவது தான் எங்களது கடமையாக இருக்கும். ளுPஐஊ சினிமாஸ் மூலமாக போடப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் மூலமாக நிறைய வருமானம் கிடைக்கும். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து நிறைய உதவிகள் செய்வோம். நாடக நடிகர்களின் குடும்பத்துக்கு கல்வி திட்டத்துக்கு உதவிகள் செய்வோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்.

அவர் எதை மனதில் வைத்து சொல்லியிருப்பார் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பாண்டவர் அணியை விமர்சிக்கவில்லை. அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆதாரங்கள் மூலமாக பதிலளித்திருக்கிறோம். பாண்டவர் அணியின் எண்ணம் சிறப்பாக இல்லை. நாங்கள் ஜெயித்தால் கட்டிடம் கட்டுவோம் என்கிறார்கள், அப்படி என்றால் எங்களால் கட்ட முடியாதா?' என்று தெரிவித்துள்ளார்.

விஷால் மீது தாக்குதல்

இது ஒருபுறமிருக்க, நடிகர் சங்கத் தேர்தலின் போது நடிகர் விஷால் தாக்கப்பட்டதாகவும், அவரது இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து,  பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடப்பதாக விஷால் அணியினர் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து விஷால் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதிரணியினர் விஷாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஷாலின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்து விழுந்த விஷாலை தண்ணீர் தெளித்து எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வெளியே விஷால் அழைத்துவரப்பட்டார்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த விஷால், 'தேர்தல் முடிந்த பிறகே எதையும் பேச உள்ளேன். என்ன அடித்தாலும் தேர்தல் தொடரும். நடிகர் அல்லாத ஒருவர் தாக்க முயன்றார்' என்று கூறினார்.

இந்த சம்பவத்துக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .