2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வசூலில் சாதனை படைக்கும் பிரேமலு

Freelancer   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான பிரேமலு, வசூலில் சாதனைப் படைத்து வருகின்றது. ஏற்கனவே, 'தண்ணீர் மாத்தன் தினங்கள்" மற்றும் 'சூப்பர் சரண்யா" போன்ற வெற்றிப் படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் கிரிஷ் ஏ.டி., 'பிரேமலு" திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் எளிமையான அதேசமயம் வசீகரிக்கும் கதைக்களமும், நகைச்சுவையுடன் சேர்ந்த நல்ல காதல் கதையும் இருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளமை பாராட்டுக்குறியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X