Freelancer / 2024 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடையாக நடிகர் பிரபாஸ் வழங்கினார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டி விட்டது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ரூ.2 கோடி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கி உள்ளார்.S
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026