2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் பிரபல நடிகர் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல  பஞ்சாபி  நடிகரும்  சமூக ஆர்வலருமான  தீப் சித்து என்பவர் அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு (15) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தீப் சித்து  பயணித்த காரானாது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியமையினாலே இப்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான தீப் சித்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

தீப் சித்து கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறி சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றியமை தொடர்பில் , போராட்டத்தைத் தூண்டிய  வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு   அண்மையில் பிணையில் வெளியே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மரணம் பொலிவூட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X