2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

விஜயை Unfollow செய்த மகன்

S.Renuka   / 2026 மார்ச் 01 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை அவரது மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைத்தளங்களில் அன்ஃபாலோ (Unfollow) செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விஜய் - சங்கீதா ஜோடியின் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் சிக்கல் எழுந்துள்ளது.  இது தொடர்பான வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது தந்தையை அன்ஃபாலோ செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சயை பொறுத்தவரை அவர் தற்போது, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘சிக்மா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. 2021ம் ஆண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .