Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை என்றாலும், வாக்காளர் என்ற முறையில் மாநாட்டில் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அவர், விஜய்யின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, நானும் ஒரு வாக்காளர் என்ற முறையில் மாநாட்டுக்கு செல்வேன். அவர் என்ன சொல்ல போகிறார், இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட மக்களுக்கு அவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்று ஒரு வாக்காளராக ஓரமாக நின்று பார்ப்பேன்.
இதற்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டத்தோட கூட்டமா ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தோடு இணைகிறேன் என்று சொல்லிவிட முடியாது, முதலில் அவர் முதல் அடி எடுத்துவைத்து மாநாடு நடக்கட்டும், அதில் அவர் என்ன சொல்ல வருகிறார், கட்சியின் கொள்கை என்ன என்று பார்க்கலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அவர்களின் சர்ச்சை, அவர் அவர்களின் கருத்து இதில் நான் கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை, என்னை பொறுத்தவரை, நாலு பேருக்கு சோறு போட்டேனா, பெண்களை படிக்க வைத்தேனா என்று யோசிப்பேன் என விஷால் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
புதிய அரசியல் கட்சித் தொடங்கி உள்ள நடிகர் விஜய், அரசியல் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்நது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மருத்துவர் அணி, தொழில்நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாக பிரித்து வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு விஜய் என்ன பேச போகிறார்.கட்சிகொள்கை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
12 minute ago
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 Aug 2025
23 Aug 2025