2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்கும் இயக்குநர் ஹரி

Editorial   / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மகாராஜா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' பாகம் 2 திரைப்படம்  கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'விடுதலை 2'-வுக்கு பிறகு விஜய் சேதுபதி கைவசம் 'காந்தி டாக்ஸ்', 'ஏஸ்', ட்ரெயின்' என அடுத்தடுத்து படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரது கால்ஷீட் டைரியில் இன்னொரு புதிய படம் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை 'சாமி, ஐயா, சிங்கம்' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஹரி இயக்கவுள்ளாராம். இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா டூயட் பாடி ஆடப்போகிறார். 

மேலும், இப்படத்தை நயன்தாராவே தனது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரௌடி பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்போகிறார்களாம். மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X