Freelancer / 2026 ஜனவரி 07 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் 'ஜனநாயகன்' என்ற தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டார் நடிகர் விஜய். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் திகதி ரிலீஸாக உள்ளது.
வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. விண்ணப்பித்து பல நாட்களாகியும் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காதது விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் விவாதத்தை முன்வைத்தன.
அப்போது படத்தயாரிப்பு நிறுவனம், ''தணிக்கை குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உறுப்பினர் ஒருவர் புகார் கொடுத்தார் என்பதற்காக சென்சார் தர மறுக்கிறார்கள். டிசம்பர் 18ம் தேதியே சென்சாருக்கு விண்ணப்பித்து விட்டோம்.
வழக்கமாக ஒரு வாரத்தில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், வேண்டுமென்றே சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். ஆய்வு குழுவின் ஒருவரின் புகாரை மட்டுமே ஏற்று இப்படி செய்கின்றனர். நாளை மறுநாள் படம் ரீலிசாக வேண்டும். ஜனநாயகன் படத்துக்காக ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளோம்'' என்று வாதிட்டது
பின்பு தனது விவாதங்களை முன்வைத்த தணிக்கை வாரியம், ''மறுஆய்வுக்கு படம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். அதற்குள் நீதிமன்றம் வந்து விட்டனர்.
உரிய காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என கூறிய பின்னரும் மீண்டும் ஆய்வுக்கு அனுப்ப எங்களுக்கு அதிகாரம் உள்ளது. படத்தை பார்த்தபின் அனைத்து உறுப்பினர்களின் கருத்தை மண்டல தலைவர் பரிசீலிப்பார். படத்தை மறு ஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது'' என்று தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''பட தயாரிப்பு நிறுவனம் முன்பே வெளியீட்டு தேதியை சொன்னாலும் சென்சார் போர்டு டைம்லைனை பின்பற்றிதான் ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் எல்லாம் அசாதாரணமாக நடக்கிறது'' என்று கூறி விசாரணையை நிறைவு செய்தார்.
மேலும் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் ஜனவரி 9ம் திகதி (நாளை மறுநாள்) தான் ஜனநாயகன் படம் ரீலிசாக உள்ளது. இதனால் ஜனநாயகன் படம் தள்ளிப்போகவே அதிக வாய்ப்புள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். R
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago