2025 மே 01, வியாழக்கிழமை

விடுதலைக்கு தயாரான `சுமோ’

Mithuna   / 2024 ஜனவரி 30 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்து மாட்டிக்கொள்ளும் சுமோ வீரரை, ஹீரோ சிவா எப்படி மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்கிறார்' என்கிற ஒரு வரி கதைதான் சுமோ திரைப்படம். 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்தது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'மிர்ச்சி' சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் எனப் பலர் நடிக்க ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் 'சுமோ' படத்தை எஸ்.பி.ஹோசிமின் இயக்கியிருந்தார். 

ஜப்பானின் இருந்து உண்மையான சுமோ விளையாட்டு வீரரையும் இந்த படத்தில் நடிக்க வைத்திருந்தார்கள். ஏற்கெனவே மிர்ச்சி விஜய், பிரியா ஆனந்த் இருவரின் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கொரோனாவால் படம் தள்ளிப்போன நிலையில், ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்களில் வெளியிட பொறுமை காத்தது, படக்குழு. நான்கு வருடங்கள் ஆகியும் படத்தின் வெளியீடு குறித்து செய்தி வராமல் இருந்த நிலையில், தற்போது 'சுமோ' படத்தின் வெளியீட்டு வேலைகள் நடப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஐசரி கணேஷின் தயாரிப்பில் ரிலீஸாகாமல் இருந்த 'சிங்கப்பூர் சலூன்', 'சுமோ', 'ஜோஸ்வா' போன்ற படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதில் முதல் படமாக ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன் பின்னர் ஏப்ரலில் 'சுமோ' படத்தை வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .