J.A. George / 2022 மே 03 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக ‛விட்னஸ்' என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
தீபக் என்பவர் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ரோகினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களை பற்றிய கதையாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் குறித்து நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‛தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
45 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026