2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விவாகரத்தை தெரிவித்த ந​டிகை ஷாலினி

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீ தமிழ் டிவியின் முள்ளும் மலரும் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ஷாலினி. இதர பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று இருக்கிறார். ஷ்யாம் என்பவரை மணந்த ஷாலினிக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர்பாரா சூழல்களில் திருமண வாழ்க்கை கசந்துபோகவே, வேறுவழியின்றி விவாகரத்து முடிவை எடுத்தார் ஷாலினி. அப்படியே அவருக்கு அண்மையில் விவாகரத்தும் கிடைத்தது. அதன் பிறகு அவர் செய்ததுதான் தற்போது பொதுவெளியில் பேசு பொருளாகி இருக்கிறது.

திருமணம், மகப்பேறு உள்ளிட்ட வாழ்வின் கொண்டாட்டமான தருணங்களை ஃபோட்டோஷூட் நடத்தி சமூகத்துக்கு தெரிவிப்பது நவீன காலத்தின் போக்காக இருக்கிறது. அதிலும் ’ப்ரி வெட்டிங் ஃபோட்டோ ஷூட்’ என்ற பெயரில் அழிச்சாட்டியங்கள் பலவற்றை அரங்கேற்றி, அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகை ஷாலினி தனது விவாகரத்து தருணத்தையும் கொண்டாட முடிவு செய்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X