2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெற்றிமாறனை கடுப்பாக்கிய ஹரிஷ்

Mayu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ்கல்யாண்.

இவர் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் இவருக்கு கை கொடுக்கவில்லை.

பின் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நடித்த பியார் பிரேமா காதல் இவருக்கு மக்களிடையே வர வேற்பை பெற்றுத்தந்தது. மேலும் இவர் "ஓமணப்பெண்ணே"  "பார்கிங்" போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனும் ஆசை நீண்ட நாளாக இருந்ததாம். அப்போது இவர் அடிக்கடி வெற்றிமாறனின் வீட்டிற்கு செல்வாராம். ஒருநாள் வெற்றிமாறன் எதற்காக இத்தனை முறை வருகிறீர்கள்?  என கேட்ட போது அதற்கு ஹரிஷ் கல்யாண் ‘அடிக்கடி வந்து என்னை பற்றி உங்களிடம் நியாபகப்படுத்துகிறேன்’ கூறினாராம்.

உடனே வெற்றிமாறன் கடுப்பாகி ‘எனக்கு எப்போது  உங்களை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பது தெரியும்.

அப்படி நீங்கள் தேவைப்படும் போது நானே கூப்பிட்டு விடுவேன்’ என சொல்லி அனுப்பி விட்டாராம். இவ்வாறு தன்னை தேடிவந்தவருக்கு பல்புகொடுத்து அனுப்பினாராம் இயக்குனர் வெற்றிமாறன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .